மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுராஸின் தலைநகர் டெகுசிகல்பா அருகே உள்ள தமரா பகுதியில் பெண்கள் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் பெண் கைதிகள் இடையே திடீரென்று மோதல் வெடித்துள்ளது. இரண்டு குழுக்களாக பிரிந்து கைதிகள் மோதிக் கொண்டனர்.
இந்த கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர். இதில் 26 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர். மற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டனர். ஏராளமான கைதிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துமனைகளில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளனர்.
பின்னர் காவல்துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.