அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (வயது 81) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை (ஜூலை 17) நேற்று தெரிவித்துள்ளது.
அதிபர் பைடனின் உடல்நிலைக் குறித்து அவரின் மருத்துவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
“அதிபர் பைடனுக்கு இன்று பிற்பகல் லேசான சுவாச பிரச்னையும், சலி மற்றும் பிரச்னையும் இருந்தது. காலை கலந்து கொண்ட நிகழ்வில் நன்றாக இருந்த நிலையில், தொடர்ந்து சோர்வுடன் இருந்ததால், கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் ரெஹோபோத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சுவாச பிரச்னை, காய்ச்சல் உள்ளிட்ட எவ்வித அறிகுறியும் இல்லை.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.