சேலம் அஸ்தம்பட்டி இட்டேரி ரோடு பகுதியில் ரிலையன்ஸ் பிரஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் நேற்று (ஜூன் 26) மாலை சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது கெட்டுப்போன காய்கறிகள், பழங்கள் மற்றும் காலாவதியான ஸ்நாக்ஸ் வகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 31 கிலோ காய்கறி பழங்கள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பாக்கெட்களில் இருந்த காலாவதியான கார வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அங்கேயே கொட்டி அழிக்கபட்டது.
மேலும், கெட்டுப்போன காலவதியான பொருட்கள் விற்பனை செய்ததற்காக ரிலையன்ஸ் பிரஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.