Connect with us

Raj News Tamil

அதானி குழுமம்: ரூ.2 லட்சம் கோடி முதலீடு!

தமிழகம்

அதானி குழுமம்: ரூ.2 லட்சம் கோடி முதலீடு!

அதானி குழுமம் குஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

அதானி பேசியதாவது , ‘அதானி குழுமம் குஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள கவ்தாவில் 725 சதுர கி.மீ. பரப்பில், உலகின் மிகப் பெரிய பசுமை எரிசக்தி பூங்காவைக் கட்டும் பணியில் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது.

இதன் மூலம் 30 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யப்படும். முந்தைய மாநாட்டில் 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.55,000 கோடிக்கு முதலீடு செய்ய இலக்கு நிா்ணயித்திருந்த நிலையில், தற்போது வரை ரூ.50,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றாா்.

More in தமிழகம்

To Top