Connect with us

Raj News Tamil

விஜயகாந்த் உடலுக்கு இன்று மாலை 4.45 மணிக்கு இறுதிச் சடங்கு!

தமிழகம்

விஜயகாந்த் உடலுக்கு இன்று மாலை 4.45 மணிக்கு இறுதிச் சடங்கு!

தேமுதிக தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வந்தனர். மேலும் விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருந்து தீவுத் திடலில் வைக்கப்பட்டது.

தீவு திடலுக்கு கொண்டுவரப்பட்ட விஜயகாந்தின் உடல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு அங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கி எடுத்து வரப்பட்டு இன்று மாலை 4.45 மணிக்கு அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.

More in தமிழகம்

To Top