Connect with us

Raj News Tamil

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

தமிழகம்

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98.

உடல்நலக் குறைவு காரணமாக ஆர்.எம்.வீரப்பன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பகல் அவர் காலமானார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், அவரது அமைச்சரவையில் ஆர்.எம்.வீரப்பன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்துள்ளார். அதேபோல், மறைந்த முதல்வர்களான ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவைகளிலும் அமைச்சராக இருந்துள்ளார்.

சத்யா மூவிஸ் நிறுனத்தை தொடங்கி பல திரைப்படங்களை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். உடல்நலக்குறைவு காரணமாக மறைந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top