Connect with us

Raj News Tamil

காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

சினிமா

காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’.மேலும் இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார்.

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் இன்று படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ‘லியோ’ படக்குழு சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு 10 – 15 நாட்கள் சென்னையில் நடக்கும் என கூறப்படுகிறது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத் சென்று எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top