Connect with us

Raj News Tamil

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2,000-க்கும் மேற்பட்டோர் பலி; 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

உலகம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2,000-க்கும் மேற்பட்டோர் பலி; 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,060 பேர் உயிரிழந்தனர். 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ரிக்டரில் 4,3 மற்றும் 6.3- க்கு இடைப்பட்ட அளவுகளில் தொடர்ச்சியாக 8 முறை நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.

தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. உயர்ந்த கட்டிடங்களில் இருந்து பலர் அலறியடித்தபடி வெளியேறி, தெருவில் தஞ்சமடைந்தனர்.

இந்த பூகம்பத்தால் ஹெராத் பகுதியில் 12 கிராமங்கள் முழுமையாக நாசமாகின. 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2,060 பேர் உயிரிழந்தனர். 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐ.நா. சபை, செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்டவை மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் சார்பில் 5 தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

More in உலகம்

To Top