Connect with us

Raj News Tamil

ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு : பாதிக்கு மேல் வீணாவதாக மக்கள் வேதனை..!!

தமிழகம்

ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு : பாதிக்கு மேல் வீணாவதாக மக்கள் வேதனை..!!

வரலாறு காணாத கனமழையால் தென் மாவட்டங்கள் மிகப்பெரிய துயரத்துக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் நிலைக்குலைந்து போயிருக்கின்றன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் ஆயிரக்கணக்கானோரை மீட்பதில் சிரமம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் பல நாட்களாக உணவும், குடிநீரும் இன்றி தவித்து வரும் மக்களுக்கு ஹெலிகாப்டர்களில் இருந்து உணவுகளை தமிழக அரசு விநியோகித்து வருகிறது. ஹெலிகாப்டர்களில் இருந்து பல அடி உயரத்தில் இருந்து வீசப்படும் உணவுப்பொட்டலங்கள் உடைந்து மண்ணோடு மண்ணாக கலந்து விடுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

எனவே, இன்னும் பாதுகாப்பான பைகளில் உணவுப் பொட்டலங்களை வைத்து விநியோகிக்கவும், ஹெலிகாப்டர்களை சில அடி தூரம் கீழே வந்து உணவுப் பொட்டலங்களை போடுமாறும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top