Connect with us

Raj News Tamil

கைரோகாப்டர்கள் மூலம் இமயமலை சுற்றுலா – அதிநவீன திட்டம்! கேக்கவே செமயா இருக்கு!

இந்தியா

கைரோகாப்டர்கள் மூலம் இமயமலை சுற்றுலா – அதிநவீன திட்டம்! கேக்கவே செமயா இருக்கு!

இந்தியாவின் ஆன்மீக தளமாகவும், சுற்றுலாத் தளமாகவும், சிறந்து விளங்கி வருவது இமயமலை.

நடிகர் ரஜினிகாந்த் முதல் வித்யூத் ஜமால் வரை பல்வேறு செலிபிரிட்டிகளும், இமயமலையில் சுற்றுலா செல்வதை, ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறு இருக்க, ராஜாஸ் ஏரோஸ்போர்ட் மற்றும் அட்வெஞ்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, உத்தரகாண்ட் மாநில அரசு, புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, பல்வேறு அழகியலை கொண்ட இமயமலையின் நிலப்பரப்புகளை, சுற்றுலா பயணிகள் வான்வழியில் ரசிக்க, கைரோகாப்டர்கள் வாங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், வானில் பறந்துக் கொண்டு, இமயமலையின் அழகியல், ஆர்பரிக்கும் ஆறுகளை கண்டுகளிக்கும் முடியும்.

இதற்காக, இத்தாலியில் இருந்து அதிநவீன கைரோகாப்டர்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம், சுற்றுலாத்துறை மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த கைரோகாப்டர்களின் சோதனை ஓட்டம், கடந்த டிசம்பர் 16-ஆம் வெற்றிகரமாக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in இந்தியா

To Top