Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

ஓடும் பேருந்தில் இருந்து கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்த கணவன்..!!

தமிழகம்

ஓடும் பேருந்தில் இருந்து கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்த கணவன்..!!

திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைமெய்யன். இவருடைய மகன் பாண்டியன் ( 24). இவருக்கும், நத்தம் கல்வேலிபட்டியை சேர்ந்த பாலமுருகன் மகள் வளர்மதி (19) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்- மனைவி இருவரும் திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதி செல்லும் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கணவன்- மனைவி இருவருக்கும் இடையே பேருந்துக்குள் வாக்குவாதம் நடந்ததுள்ளது.

இதையடுத்து மது போதையில் இருந்த பாண்டியன் அவரது மனைவியைக் காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வளர்மதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வளர்மதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாண்டியனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top