Connect with us

Raj News Tamil

கள்ளத்தனமாக மது விற்றதற்கு ஆதாரம் இருக்கிறதா ..? தனி நபராக அரசு மதுக்கடையை மூடிய பெண் !

தமிழகம்

கள்ளத்தனமாக மது விற்றதற்கு ஆதாரம் இருக்கிறதா ..? தனி நபராக அரசு மதுக்கடையை மூடிய பெண் !

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வீரசோழபுரம் மதுக்கடை அருகே வசிப்பவர் கமலி கண்ணு. இவர் கடையில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மீன்சுருட்டி காவல்துறையினர் கமலி கண்ணு வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரது உறவினர்கள் விற்பனை செய்ததாக கூறப்பட்ட நிலையில் உறவினர்களை அழைத்து விசாரணை செய்துள்ளனர்.

கமலி கண்ணு தனது கடையில் மதுபானம் விற்பனை செய்யவில்லை எனவும் தனது இடத்தில் அரசு மது கடை வைத்து கொண்டு,என்னை கைது செய்ய வருகிறீர்களா என கூறி அரசு மதுக்கடையை பூட்டி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மது கடையை அகற்றவும், உறவினரை விடுவிக்கவும் கூறி போராட்டத்தில் ஈடுட்டுள்ளார்.

மேலும்,நான் மதுபானங்களை விற்கவில்லை அதற்க்கு ஆதாரம் இருக்கிறதா எனக்கூறி அவர் ஆத்திரமடைந்தார்.தனி ஒரு பெண்ணாக அரசு மதுபான கடையை மூடி போராட்டம் செய்வது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீன்சுருட்டி காவல்துறையினா், அரசு மதுக்கடையை மூடியதாக கமலி கண்ணு மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பம் நடந்த சில நிமிடங்கள் கழிந்த பின்னர் மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top