Connect with us

Raj News Tamil

அமித்ஷாவின் பேச்சுக்கு எதிராக மணிப்பூரில் ஒன்று திரண்ட 10,000 குக்கி பெண்கள்!

இந்தியா

அமித்ஷாவின் பேச்சுக்கு எதிராக மணிப்பூரில் ஒன்று திரண்ட 10,000 குக்கி பெண்கள்!

மணிப்பூர் வன்முறைக்கு மியான்மரிலிருந்து வந்தேறிய குக்கி சமூக மக்களே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அமித்ஷாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் குக்கி சமூகத்தை சேர்ந்த 10,000 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது உரையாற்றிய அமித்ஷா, “மியான்மர் நாட்டிலிருந்த ஊடுறுவிய குக்கி சமூக மக்கள்தான் இந்த வன்முறைக்கு காரணம்” என்று விமர்சித்திருந்தார்.

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மிசோ தேசிய முன்னணி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று குக்கி-ஜோ சமூகங்களை சேர்ந்த சுமார் 10,000 பெண்கள் அமித்ஷாவின் கருத்துக்கு எதிராக கண்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் உரையாற்றிய பெண்கள் நாங்கள் சட்டவிரோத ஊடுறுவல்காரர்கள் அல்ல. நாங்கள் இந்திய குடிமக்கள் என்றும் முழக்கமிட்டுள்ளனர்.

More in இந்தியா

To Top