Connect with us

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நடைபெற்றது .

இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 4,107 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதி உள்ளனர்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசின் தேர்வுகள் துறை இயக்குனர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் அரசு தேர்வுகள் இயக்கக இயக்குனர் சேதுராம் வர்மா இன்று காலை 9.30 மணிக்கு வெளியிட்டு உள்ளார்.

மாணவர்கள் www.results.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை பார்த்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

அதனுடன் , மாணவர்கள் பள்ளியில் அளித்த உறுதிமொழி படிவத்தில் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top