Connect with us

தமன்னாவை ஓவர்டேக் செய்யும் ரம்யாகிருஷ்ணன்! வைரலாகும் காவாலா நடனம்!

சினிமா

தமன்னாவை ஓவர்டேக் செய்யும் ரம்யாகிருஷ்ணன்! வைரலாகும் காவாலா நடனம்!

நெல்சன் இயக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. குறிப்பாக இந்தப் படத்தில் தமன்னா நடனம் ஆடியுள்ள ‘காவாலா’ பாடல் இணையத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்று டிரெண்ட்டாகி வருகிறது.

மேலும் ,இளைஞர்கள் பலரும் ‘காவாலா’ நடனத்தை ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவிட்டு கொண்டிருக்கின்றனர்.தற்போது இந்த டிரெண்டில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் இணைந்துள்ளார். ‘காவாலா’ பாடலுக்கு ரம்யா கிருஷ்ணன் நடனமாடி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.இப்பதிவானது ரம்யாகிருஷ்ணன் ரசிகர்கள் மத்தியில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top