Connect with us

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கலைஞர் பெயர் வைக்க முடிவு??

தமிழகம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கலைஞர் பெயர் வைக்க முடிவு??

திமுக வர்த்தக அணி மாநில நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் காசி முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. எழும்பூர் ரயில் நிலையத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்ட வேண்டும் என மத்திய அரசு அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்ட வேண்டும் என அதிமுக நீண்ட காலமாக மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. அவர்களது கோரிக்கையை ஏற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top