மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சோரம் மக்கள் இயக்கம் ஆட்சியமைக்கிறது.
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மிசோ தேசிய முன்னணி 10 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.