Connect with us

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை வாழ்த்து!

தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை வாழ்த்து!

முதல்வர் மு.க.ஸ்டாலின் 71- வது பிறந்த நாளையொட்டி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top