Connect with us

Raj News Tamil

விஜயகாந்தை கண்டுகொள்ளாத வடிவேலு….என்ன பழக்கம்னா இது..!!

தமிழகம்

விஜயகாந்தை கண்டுகொள்ளாத வடிவேலு….என்ன பழக்கம்னா இது..!!

என் தங்கை கல்யாணி படம் மூலம் அறிமுகமான நடிகர் வடிவேலு விஜயகாந்தின் சின்னக் கவுண்டர் படத்தில் நடித்தார். வடிவேலு மீது தனி பாசமாக இருந்த விஜயகாந்த் தொடர்ந்து தன் படங்களுக்கு வடிவேலுவை பரிந்துரை செய்தார்.

இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வடிவேலுவை அழைத்தார்கள். யாரும் எதிர்பார்க்காதபடி தேமுதிக தலைவரான விஜயகாந்தை தாக்கிப் பிரச்சாரம் செய்தார் வடிவேலு.

அதன் பிறகு வடிவேலுவின் கெரியர் அடிவாங்கத் துவங்கியது. அப்பொழுது அடிவாங்கிய கெரியர் தற்போது வரை சரியாகவில்லை.

போண்டா மணி

வடிவேலுடன் பல படங்களில் இணைந்து நடித்த நடிகர் போண்டா மணி சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த 23ம் தேதி காலமானார். அவருடைய மறைவுக்கு சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் வடிவேலு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவோ இரங்கல் தெரிவிக்கவோ இல்லை.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இந்த செய்தி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருடைய மறைவுக்கும் நடிகர் வடிவேலு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவோ இரங்கல் தெரிவிக்கவோ இல்லை.

வடிவேலுவின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த நெட்டிசன்கள் தனது ஆத்திரத்தை சமூக வலைத்தளங்களில் கொட்டி தீர்த்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top