Connect with us

Raj News Tamil

நிலக்கரி விற்றதில் ரூ.6000 கோடி ஊழல்..வசமாக சிக்கும் பாஜக?

இந்தியா

நிலக்கரி விற்றதில் ரூ.6000 கோடி ஊழல்..வசமாக சிக்கும் பாஜக?

2014-ல் அதிமுக ஆட்சியின்போது இந்தோனேசியாவில் வாங்கிய நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு விலை அதிகமாக அதானி நிறுவனம் விற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தோனேசியாவில் ஒரு டன் ரூ.2,330 என்ற விலையில் கொள்முதல் செய்த நிலக்கரியை தமிழக அரசிடம் ஒரு டன் ரூ.7650 என்று விலையை உயர்த்தி விற்பனை செய்துள்ளது.

தரம் குறைந்த நிலக்கரியை தரம் உயர்த்தி காண்பிக்கவும், விலையை அதிகப்படுத்தவும் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளது அதானி நிறுவனம். இந்த இறக்குமதி மூலம் ரூ.6000 கோடி அளவுக்கு தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலக்கரி இறக்குமதி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி 2018-ம் ஆண்டு அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது. எடப்பாடி முதல்வராக இருந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பாஜக ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், இந்த ஊழல் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் அபிமான நண்பர் அதானி குறைந்த விலைக்கு விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top