Connect with us

Raj News Tamil

16 வருடங்களுக்கு பிறகு காஸா பகுதியில் அதிகாரத்தை இழந்த ஹமாஸ் – இஸ்ரேல்

உலகம்

16 வருடங்களுக்கு பிறகு காஸா பகுதியில் அதிகாரத்தை இழந்த ஹமாஸ் – இஸ்ரேல்

ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி முதல், போர் நடந்து வருகிறது.

இந்த போரில், 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 240-க்கும் மேற்பட்டோர் பினைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், 75 வருட இஸ்ரேலிய வரலாற்றில், இது தான் மிகவும் மோசமான நாள் என்றும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, இஸ்ரேலிய ராணுவம், காஸா பகுதியில், தங்களது தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதலில், 4 ஆயிரத்து 630 குழந்தைகள் உட்பட, 11 ஆயிரத்து 240 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், காஸா பகுதியில் வாழும், 3-ல் 2 பங்கு பேர், இந்த கொடூர தாக்குதலால், நிலம் இல்லாதவர்களாக மாறினர்.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட், இஸ்ரேலிய டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், 16 வருடங்களுக்கு பிறகு, காஸா பகுதியில், ஹமாஸின் அதிகாரம் முடிவுக்கு வந்துள்ளது என்றும், தீவிரவாதிகள் தெற்கு பகுதிக்கு தப்பி ஓடிவிட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும், காஸாவின் குடிமக்கள் ஹமாஸின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றும், தெரிவித்தார். ஆனால், இவ்வாறு அவர் கூறியதற்கான ஆதாரம் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in உலகம்

To Top