Connect with us

Raj News Tamil

காலவரையற்ற பாதுகாப்பு தருகிறோம்.. ஆனால் போர் நிறுத்தம் இல்லை – நேதன்யாகு

உலகம்

காலவரையற்ற பாதுகாப்பு தருகிறோம்.. ஆனால் போர் நிறுத்தம் இல்லை – நேதன்யாகு

இஸ்ரேல் நாட்டிற்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, கடந்த அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வந்தது. இந்த போரில், காசா பகுதியை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், கூறப்பட்டது.

மேலும், இஸ்ரேல் ராணுவத்தின் தீவிர குண்டு வீச்சில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். இருப்பினும், இஸ்ரேல் ராணுவம், காசா பகுதிக்குள் ஊடுருவி, அங்குள்ள ஹமாஸ் தீவிரவாதிகளுடன், கடந்த ஒரு வாரமாக பேரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் அதிபர் பென்ஜமின் நேதன்யாகு, ஏ.பி.சி என்ற ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், ஹமாஸ் உடனான போருக்கு பிறகு, காசா பகுதி ஒட்டுமொத்தத்திற்கும், காலவரையற்ற பாதுகாப்பு வழங்குவது என்பது எங்களுடைய பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பணையக் கைதிகள், வெளியேற்றப்படுவதற்காக பேரில் சிறிய இடைவெளியை ஏற்படுத்தி தருகிறோம் என்று கூறிய அவர், ஆனால், போர் நிறுத்தப்படுவதற்கு நிச்சயம் வாய்ப்பு இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார். இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், காசா பகுதிக்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற இந்த அறிவிப்பை வைத்து பார்க்கும்போது, 2.3 மில்லியன் பாலஸ்தீனியர்களின் வசிப்பிடமாக உள்ள கடலோர பகுதிகளை, தனது கட்டுப்பாட்டின் கீழ், இஸ்ரேல் எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in உலகம்

To Top