Connect with us

Raj News Tamil

மீண்டும் நடிப்பில் அசத்தியுள்ளாா் எஸ்.ஜே. சூர்யா..! வைரலாகும் தனுஷின் எக்ஸ் பதிவு..!

சினிமா

மீண்டும் நடிப்பில் அசத்தியுள்ளாா் எஸ்.ஜே. சூர்யா..! வைரலாகும் தனுஷின் எக்ஸ் பதிவு..!

‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில், ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்துவிட்டதாக நடிகர் தனஷ் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தாா்.

மேலும் படம் குறித்த தனது கருத்துக்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான பதிவில், “ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்துவிட்டேன். கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான படைப்பு. அற்புதமாக இருப்பது எஸ்.ஜே. சூர்யாவுக்கு வாடிக்கையான விஷயமாகிவிட்டது. ராகவா லாரன்ஸ்-இன் நடிப்பு சிறப்பு. சந்தோஷ் நாராயணின் இசை அழகு. படத்தின் கடைசி 40 நிமிடங்கள் உங்களின் மனங்களை கொள்ளையடித்துவிடும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்,” என்று தெரிவித்து இருக்கிறார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top