Connect with us

RajNewsTamil

பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்கு பதிவு

தேர்தல் 2024

பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்கு பதிவு

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த பின் கடநாடு கிராமத்தில் எந்தவித முன் அனுமதியும் இன்றி 100-க்கும் மேற்பட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பெயரில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தேர்தல் 2024

To Top