Connect with us

கொளுத்தும் வெயில் : நிழல் குடை இல்லாததால் பொதுமக்கள் அவதி

தமிழகம்

கொளுத்தும் வெயில் : நிழல் குடை இல்லாததால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மதிய வேளையில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

கரூரில் கடந்த 20 தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது, சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.

தற்போது வெயில் காலம் என்பதால் 107 டிகிரிக்கும் மேல் கரூரில் பதிவாகி வரும் நிலையில் குறிப்பிட்ட பேருந்து நிற்கும் இடத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரே ஒரு பகுதியில் மட்டும் தகரக்கொட்டை மூலம் ஐந்து பேர் மட்டும் நிற்கும் அளவிற்கு நிழல் குடை அமைக்கப்பட்டுள்ளது அதிலும் வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் அதில் பயணிகள் யாரும் நிற்பதில்லை இதனால் வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காகவும், குழந்தைகள் மற்றும் பெண்கள் வசதிக்காக நிழல் குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top