Connect with us

Raj News Tamil

அடடா…இதல்லவா சாதனை ! பலோன் டி’ஓர் விருதை எட்டாவது முறையாக முத்தமிட்ட மெஸ்ஸி!

விளையாட்டு

அடடா…இதல்லவா சாதனை ! பலோன் டி’ஓர் விருதை எட்டாவது முறையாக முத்தமிட்ட மெஸ்ஸி!

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ‘ஓர் விருதை ஃபிஃபா ஆண்டுதோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வழங்கி வருகிறது. இந்த விருதானது 1956-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருதினை அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஏற்கெனவே 7 முறை பெற்றிருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருது 30 ஆண்கள், 30 பெண்கள் என 60 வீரர், வீராங்கனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவர்களில், நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி 2009 முதல் 2010, 2011, 2012, 2015, 2019, 2021-ம் ஆண்டுகளில் தொடா்ந்த 7 முறை பலோன் டி’ஓர் விருதை வென்றிருந்தாா் தற்போது 8வது முறையாகவும் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

கடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்த மெஸ்ஸி, தொடரில் ஏழு கோல்கள் அடித்துடன் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

முன்னதாக அதிகமுறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்ற சாதனையை தகா்த்து தற்போது,அதிகமுறை வென்றவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top