Connect with us

Raj News Tamil

பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

தமிழகம்

பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

அதின் முக்கிய அம்சங்கள்:

  • அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
  • தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பாமக பாடுபடும்.
  • அரசு பணியாளர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும்.
  • இதில் அனைத்து சமூகங்களுக்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு. இட ஒதுக்கீடு உச வரம்பு நீக்கக்கப்படும்.
  • மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம். மத்திய அரசு வருவாயில் சம பங்கு.
  • குறைந்தபட்சம் ஆதரவு விலை சட்டம். வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை.
  • தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை குறைத்தல்.
  • தமிழ்நாடு சுரங்கம் இல்லா மாநிலம். NLC நிறுவனம் வெளியேற்றப்படும்.
  • தமிழ்நாட்டில் மாவட்ட வேளாண் பொருளாதாரம் மண்டலம்.
  • நதிகளை இணைத்து நாட்டு மக்களையும் இணைப்போம்.
  • தமிழ்நாட்டில் மூன்று லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்.
  • பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி.
  • மகளிருக்கு மாதம் 3 ஆயிரம் உரிமைத்தொகை, முதியோர் ஓய்வூதியம் 3000 ஆக உயர்த்தப்படும்.
  • அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம். விரைவில் எட்டாவது ஊதிய குழு அமைப்பு.
  • மாநில பட்டியலில் கல்வி. பள்ளி கல்விக்கு அதிக நிதி.
  • நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் இட ஒதுக்கீடு. கல்விக் கடன் தள்ளுபடி.
  • அனைவருக்கும் இலவச மருத்துவம். மருத்துவக் கல்லூரி தொடங்க தடை நீக்கம்.
  • போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும். மாநிலங்களுக்கும் மதுவிலக்கு மானியம்.
  • ரூபாய் 10 லட்சம் வரை வரி இல்லை. பணக்காரர்களுக்கு கூடுதல் வருமான வரி.
  • ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்படும். பெட்ரோல் டீசலுக்கும் ஜிஎஸ்டி வரி.
  • மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு. இலங்கையுடன் ஒப்பந்தம் கையெழுத்து.
  • தமிழ் இந்தியாவில் ஆட்சி மொழி. தமிழ் உயர் நீதிமன்ற அலுவல் மொழி.
  • திருக்குறள் தேசிய நூலாக்கப்படும்.
  • ஈழத் தமிழர்களுக்கு நீதி. தமிழ் ஈழத்திற்கு பொதுவாக்கெடுப்பு.
  • வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்கப்படும்.
  • தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்றப்படும்.
  • இஸ்லாமியர்கள் கிருத்துவர்களுக்கு மக்கள் தொகை படி இட ஒதுக்கீடு.
  • பிற பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ள இட ஒதுக்கீடு. நீதிபதி ரோகினி ஆணைய பரிந்துரை செயல்படுத்தப்படும்.
  • புதுவைக்கு மாநில தகுதி.
  • தர்மபுரியில் மா, தக்காளி, மரவள்ளி, பட்டுப்புழு வளர்ப்புக்கான மல்பரி ஆகியவற்றுக்கான சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்.
  • திருச்சி மாவட்டம் வாழை மண்டலமாக அறிவிக்கப்படும்.
  • கரூரில் வாழை, கோரைப்புல், முருங்கை மண்டலங்கள் அமைக்கப்படும்.
  • அரியலூர் மாவட்டத்தில் பருத்தி, முந்திரி மண்டலமும், பெரம்பலூரில் சின்ன வெங்காயம் மண்டலமும் அமைக்கப்படும்.
  • கல்வி வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அரசுத்துறை பொதுத்துறை பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த நடவடிக்கை.
  • உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தேர்தல் அறிக்கையில் பாமக வெளியிட்டுள்ளது.
Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top