ராஜஸ்தானில் சோனியா காந்தி இன்று வேட்புமனு தாக்கல்!

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 56 பேரின் பதவி காலம் முடிவடைகிறது. இவர்கள் அனைவரும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படவேண்டும்.

இதற்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இதற்காக பா.ஜ.க, சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரலியில் போட்டியிடும்போதே சோனியா காந்தி, இனி மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.

அதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் அவர் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் சோனியா காந்தி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் செல்லும் அவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதால் தற்போது சோனியா காந்தி உறுப்பினராக இருக்கும் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

  • தமிழகம்

தமிழ்நாட்டில் பெருமை பேசுவான்…ஒடிசாவில் தமிழர்களை திருடன் என்பான் அவர் யார்?

ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை திருடர்கள் போல் விமர்சித்த பிரதமர் மோடியை உலக மகா நடிகன் என வன்மையாக கண்டித்து…

15 hours ago
  • தமிழகம்

யூடியூபர் இர்பான் மீது எந்த நடவடிக்கையும் இல்லை

பிரபல யூடியூபர் இர்பான் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தனது குழந்தையின் பாலினத்தை வெளிப்படையாக தெரிவித்த காரணத்தால் அவரின் மீது…

15 hours ago
  • இந்தியா

உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு…

16 hours ago
  • இந்தியா

“எத்திலைன் ஆக்சைடு இல்லை” – MDH, எவரெஸ்ட் மசாலா பொருட்களை ஆய்வு செய்ததில் வந்த ரிசல்ட்!

இந்தியாவின் மிகவும் பிரபலமான மசாலா பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களாக இருப்பது, MDH மற்றும் எவரெஸ்ட் தான். இந்த நிறுவனங்களின்…

17 hours ago
  • இந்தியா

நிலக்கரி விற்றதில் ரூ.6000 கோடி ஊழல்..வசமாக சிக்கும் பாஜக?

2014-ல் அதிமுக ஆட்சியின்போது இந்தோனேசியாவில் வாங்கிய நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு விலை அதிகமாக அதானி நிறுவனம்…

17 hours ago
  • தமிழகம்

திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் இந்த உணவுக்கு தடை – பக்தர்கள் அதிர்ச்சி

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள், திருசெந்தூர் முருகனை விரதமிருந்து தரிசித்து…

18 hours ago