Connect with us

Raj News Tamil

3 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடும் பிரபல நடிகரின் திரைப்படம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

சினிமா

3 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடும் பிரபல நடிகரின் திரைப்படம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம், ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றவர் சந்தீப் ரெட்டி. இந்த படத்திற்கு பிறகு, பாலிவுட்டில் அறிமுகமான அவர், அர்ஜூன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான குபீர் சிங் படத்தை இயக்கியிருந்தார்.

அந்த படமும் வெற்றி பெற்றதையடுத்து, ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனாவை வைத்து, அனிமல் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 1-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில், இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் குறித்த தகவல் வெளியானது. அதன்படி, இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திரைப்படம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. 3 மணி நேரம் ஓடும் திரைப்படங்களே ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் நிலையில், 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடும் திரைப்படம், ரசிகர்களை கவருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்…

More in சினிமா

To Top