Connect with us

RajNewsTamil

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த நபர்: ஆபத்தான நிலையில் மீட்பு!

தமிழகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த நபர்: ஆபத்தான நிலையில் மீட்பு!

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசு அதிகாரிகள் தேர்தல் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் தீயை அணைத்து அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தலைஞாயிறு அடுத்த வாட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது. சேகரின் மகள் கடந்த ஓராண்டுக்கு முன் உயிரிழந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவியும் உயிரிழந்து உள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த சேகர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சேகர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மனைவி குழந்தை இறந்த துக்கத்தில் அவர் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top