Connect with us

Raj News Tamil

இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேள்வி பதிலாக பல்வேறு விஷயங்களை வீடியோ வடிவில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் ஆடியோ சீரிஸ் (Podcast) மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில்,

“திராவிட முன்னேற்றக் கழகம் 75-ஆவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி.

தற்போது இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். 2024-இல் முடிய போகிற பாஜக ஆட்சி, இந்தியாவை எப்படியெல்லாம் உருக்கிலைத்துள்ளார்கள் என்றும் எதிர்காலத்தில் நாம் உருவாக்கவுள்ள சமத்துவ சகோதரத்துவ இந்தியாவை பற்றியும் ஆடியோ தொடராக பேசவுள்ளேன். தெற்கிலிருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

More in தமிழகம்

To Top