Connect with us

Raj News Tamil

டெல்லி செல்லும் 38 ரயில்கள் ரத்து!

இந்தியா

டெல்லி செல்லும் 38 ரயில்கள் ரத்து!

மறுசீரமைப்பு பணி காரணமாக டெல்லி செல்லும் 38 ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்புப் பணி காரணமாக அந்த வழியாகச் செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தெற்கு ரயில்வேக்குட்பட்ட சென்னை, கோவை, மதுரை மற்றும் கேரளத்தின் கொச்சுவேலியில் இருந்து செல்லும் 38 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படவுள்ளன.

டெல்லி ரயில்கள்- ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம்: சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் துரந்தோ விரைவு ரயில் (எண்:12269) ஜன. 15 முதல் பிப். 3-ஆம் தேதி வரையும், ராஜ்தானி விரைவு ரயில் ஜன.31 முதல் பிப்.4-ஆம் தேதி வரையும், கரீப் ரத் விரைவு ரயில் ஜன. 16 முதல் பிப்.3 வரையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயில் ஜன.21 முதல் பிப்.7 வரையும், மதுரையில் இருந்து செல்லும் சம்பா்க் கிராந்தி விரைவு ரயில் ஜன.14 முதல் பிப்.6-ஆம் தேதி வரையும், கோவையில் இருந்து செல்லும் கொங்கு அதிவிரைவு ரயில் ஜன.21 முதல் ஜன.31-ஆம் தேதி வரையிலும், கன்னியாகுமரியில் இருந்து டெல்லி செல்லும் திருக்கு விரைவு ரயில் ஜன.10 முதல் பிப்.2-ஆம் தேதி வரையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து தில்லிக்கு செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22653/22654) ஜன. 13 முதல் பிப்.5-ஆம் தேதி வரையும், ஸ்வா்ண ஜெயந்தி அதிவிரைவு ரயில் ஜன.9 முதல் பிப்.2-ஆம் தேதி வரையிலும், கேரள அதிவிரைவு ரயில் ஜன.27 முதல் பிப்.5-ஆம் தேதி வரையும், எா்ணாகுளத்தில் இருந்து டெல்லி செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22655/22656) ஜன.10 முதல் பிப்.2-ஆம் தேதி வரையும், எா்ணாகுளம் – டெல்லி துரந்தோ விரைவு ரயில் ஜன.13 முதல் பிப்.6-ஆம் தேதி வரையும், மில்லினியம் விரைவு ரயில் ஜன.6 முதல் பிப்.6-ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது. மதுரையில் இருந்து சண்டிகா் செல்லும் விரைவு ரயில் ஜன.10 முதல் பிப்.5-ஆம் தேதி வரையிலும், கொச்சுவேலியில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் விரைவு ரயில் ஜன.14 முதல் பிப்.7-ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படும்.

ஸ்ரீ வைஷ்ணவ தேவி கேந்த்ராவுக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் அந்தமான் விரைவு ரயில் ஜன.10 முதல் பிப்.6-ஆம் தேதி வரையும், கன்னியாகுமரியில் இருந்து செல்லும் ஹிம்சாகா் விரைவு ரயில் ரயில் ஜன.12 முதல் பிப்.5-ஆம் தேதி வரையும், திருநெல்வேலியில் இருந்து செல்லும் ரயில் (எண்: 16787) ஜன.8 முதல் பிப்.1-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படவுள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து ரிஷிகேஷ் செல்லும் அதிவிரைவு ரயில் ஜன.12 முதல் பிப்.5-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும்.

மேலும், சென்னை- புதுதில்லி தமிழ்நாடு விரைவு ரயில், கொச்சுவேலி சம்பா்க் கிராந்தி விரைவு ரயில், மங்களா லட்சத்தீவு விரைவு ரயில் உள்ளிட்டவை ஆக்ராவிலிருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top