கடந்த ஞாயிறு அதாவது தீபாவளி முன்தினம் அன்று, கோவை உக்கடம் பகுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் அவரின் வீட்டில் சோதனை செய்ததில் 75.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் தயாரிப்பதற்கான வேதிபொருட்கள் பறிமுதல் செய்தனர்.மேலும் இதற்கு தொடர்புடைய 6-பேரை கைது செய்த போலீசார் பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் குண்டு வெடிக்கு தேவையான வேதிப்பொருட்களை அமேசான்,ஃப்ளிப்கார்ட் போன்றவைகளில் வாங்கியதாக தகவல் தெரிவித்தனர்.