பாலா இயக்கத்தில் கடந்த 2001 -ஆம் ஆண்டு வெளியான நந்தா திரைப்படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட்டாக அமைந்திருந்தது.
இந்நிலையில், நந்தா படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஸ்டண்ட் மாஸ்டர் சிவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது, சூர்யாவை எப்படியாவது ஒரு ஆக்சன் ஹீரோவாக மாற்றியே ஆக வேண்டும் என்று அடிக்கடி தன்னிடம் பாலா சொல்லியதாக இவர் கூறியிருக்கிறார். அதன் பிறகு தான், சாக்லேட் பாயாக இருந்தவர் முடியை கட் செய்து கொண்டு ரஃகட் சூர்யாவாக நந்தாவில் மிரட்டியிருப்பார்.
இப்படி தனது கேரியரையே மாற்றி அமைத்த பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.