Connect with us

Raj News Tamil

வீரன் பட நடிகர் மரணம்! ரசிகர்கள் இரங்கல்!

சினிமா

வீரன் பட நடிகர் மரணம்! ரசிகர்கள் இரங்கல்!

முண்டாசுப்பட்டி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் மதுரை மோகன். இந்த படத்திற்கு பிறகு, நீ நான், மருதம் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

கடைசியாக வீரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நடிகர் மதுரை மோகன், இன்று காலை காலமானார்.

இதுகுறித்து நடிகர் காளி வெங்கட், இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், ‘ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.

ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை முண்டாசுப்பட்டி படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும்,

“வீரன்” பட இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் அவர்களுக்கும் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குனர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்’ என்று கூறியிருந்தார்.

More in சினிமா

To Top