Connect with us

Raj News Tamil

“அலெக்ஷா நாய் மாறி கத்து” – குரங்கிடம் இருந்து சாதூர்யமாக தப்பித்த சிறுமி!

இந்தியா

“அலெக்ஷா நாய் மாறி கத்து” – குரங்கிடம் இருந்து சாதூர்யமாக தப்பித்த சிறுமி!

அமேசான் நிறுவனத்தில் அலெக்ஷா என்ற தொழில்நுட்ப கருவி ஒன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நம்முடைய வாய்வழி கட்டளைகளின் மூலமாக இயங்கும் இந்த கருவியை, குழந்தைகள் பயன்படுத்தலாமா என்று பெரும் விவாதமே நடந்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு இருக்க, இந்த அலெக்ஷா கருவியை பயன்படுத்தி, சிறுமி ஒருவர், குரங்கிடம் இருந்து, சாதூர்யமாக தப்பித்துள்ளார். அதாவது, உத்தரபிரதேச மாநிலம் பாஸ்டி மாவட்டத்தை சேர்ந்தவர் நிகிதா. 13 வயதான இவர், தனது உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, நிகிதாவும், அங்கிருந்து ஒரு வயது குழந்தையுடன், சமையல் அறையில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், அங்கு வந்த குரங்கு ஒன்று, சமையல் அறையில் இருந்த பாத்திரங்களை எடுத்து, சிறுமியை தாக்கியுள்ளது.

ஆனால், குரங்கு வந்திருப்பது பற்றி அறியாத உறவினர்கள், மற்றொரு அறையில் இருந்துள்ளனர். இதனால், ஒரு வயது குழந்தை, “அம்மா.. அம்மா” என்று கத்தியுள்ளது. ஆனால், அந்த சமயத்தில் சாதூர்யமாக யோசித்த நிகிதா, ஃபிரிட்ஜ் மேல் இருந்த அலெக்ஷா கருவியை எடுத்து, “அலெக்ஷா நாய் போல குரை ” என்று கூறியுள்ளது.

நிகிதாவின் கட்டளையை ஏற்ற அலெக்ஷா கருவி, உடனே நாயை போல குரைத்துள்ளது. இதனால், நாய் வந்துவிட்டது என்று நம்பிய குரங்கு, அங்கிருந்து பயந்து ஓடிவிட்டது. இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள், அவளது புத்திசாலிதனத்தை வெகுவாக பாராட்டினார்கள்.

என்னதான் இருந்தாலும், இந்த அலெக்ஷா கருவியை குழந்தைகள் பயன்படுத்துவது என்பது, இன்னும் விவாதமாகவே உள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின்போது, 10 வயது சிறுமி ஒருவர், அலெக்ஷா கருவியை பயன்படுத்தியுள்ளார்.

அப்போது, அந்த சிறுமிக்கு, அலெக்ஷா ஒரு சவாலை விடுத்துள்ளது. இதனை ஏற்ற அந்த சிறுமியும் அதனை செய்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து, அந்த சிறுமியின் தாயார் இணையத்தில் பதிவிட்ட நிலையில், “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில், இந்த பிரச்சனையை விரைவாக சரி செய்துவிடுகிறோம்” என்று அமேசான் நிறுவனம் கூறியிருந்தது.

இந்த இரண்டு சம்பவங்களின் மூலம், நமக்கு உறுதியாவது என்னவென்றால், தொழில்நுட்ப கருவிகளை சரியான வழியில் பயன்படுத்தினால், நன்மை கிடைக்கும்..

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top