Connect with us

Raj News Tamil

“என்னால் இனிமேல் முடியாது” – அதிர்ச்சி தகவலை கூறிய அமீர்!

சினிமா

“என்னால் இனிமேல் முடியாது” – அதிர்ச்சி தகவலை கூறிய அமீர்!

பிக்-பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் அமீர். இவரும், அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட நடிகை பாவனியும், காதலித்து வந்தனர்.

நிகழ்ச்சிக்கு பிறகும், இவர்கள் இருவரது காதல் தொடர்ந்தது. இந்நிலையில், நடிகர் அமீர் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் இரண்டு மாணவர்களை படிக்க வைத்தேன். ஆனால், அதன்பிறகு என்னிடம் பணம் இல்லாததால், என்னால், அந்த மாணவர்களுக்கு உதவ முடியவில்லை. அதன்பிறகு, எனக்கு தெரிந்து சிலரிடம் பணம் வாங்கிக் கொடுத்தேன்.

தற்போது, அவர்களிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டார்கள். அந்த இரண்டு மாணவர்களும், நன்றாக படிக்கக் கூடியவர்கள். அதனால், அவர்களது படிப்புக்கு பண உதவி செய்யுங்கள்” இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top