Connect with us

Raj News Tamil

பாஜக 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது…மம்தா பானர்ஜி அதிரடி

தேர்தல் 2024

பாஜக 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது…மம்தா பானர்ஜி அதிரடி

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெரும் என பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜல்பைகுரி பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பாஜக 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதங்களுக்கு இரையாகாதீர்கள். அவை அனைத்து தேர்தல் நேரத்தில் கூறப்படும் வெற்று வாக்குறுதிகள். டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை பா.ஜ.க. அழித்துவிட்டது என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தேர்தல் 2024

To Top