Connect with us

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்கு..!

தமிழகம்

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்கு..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை என்றால் அது தீபாவளி பண்டிகை தான். ஆனால் காற்று மாசடைவதை கட்டுப்படுத்துவதற்காக உச்சநீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்தது.

அதன் அடிப்படையில் காற்று மாசை குறைக்கும் விதமாக, தமிழ்நாட்டில் பட்டாசுகள் வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி, பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றதா? என்பதை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்த 118 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

More in தமிழகம்

To Top