Connect with us

Raj News Tamil

ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்தியா

ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

டெல்லியில் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவா்களுக்கு குடியரசுத் தலைவா் சனிக்கிழமை இரவு பாரத் மண்டபத்தில் விருந்து அளித்தார். இந்த விருந்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்வா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சோ்ந்த பெரும்பான்மையான முதல்வா்கள் கலந்து கொள்ளாத நிலையில் குறிப்பாக தென் மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்களில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். இரு தலைவர்களும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

ஜோ பைடனை சந்தித்த புகைப்படத்தை எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் முதல்வர் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

More in இந்தியா

To Top