Connect with us

Raj News Tamil

கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து டான்ஸ் ஆடிய வீடியோ வைரல்!

விளையாட்டு

கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து டான்ஸ் ஆடிய வீடியோ வைரல்!

சவுதி புரோ லீக் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வளைய தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

சவுதி புரோ லீக் போட்டியில் கேஎஸ்யு கால்பந்து மைதானத்தில் அல்-அஹில் சவுதி அணியும், அல் நஸர் அணியும் மோதின. இந்தப் போட்டியில் 4-வது நிமிடத்திலே ரொனால்டோ மிரட்டலாக கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து 17-வது நிமிடத்தில் அல்-நஸர் அணியின் தலிஸ்கா கோல் அடித்தார். அல்-அஹில் சவுதி வீரர் கேஸ்சி 30-வது நிமிடத்தில் கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

பின்னர் தலிஸ்கா 45+6வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, 50வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அல் அஹிலின் ரியாத் மஹரேஸ் கோல் அடித்தார்.

இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்ததால் ஆட்டம் அனல் பறந்தது. ரசிகர்களும் உற்சாகத்தில் மூழ்க்கினர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதன்மூலம் அல் நஸர் அணி 4-2 என முன்னேறியது.

87-வது நிமிடத்தில் அல்-அஹில் அணிக்கு ஒரு கோல் (ஃபெரஸ் அல்ரிகான்) அடிக்க அந்த அணி 3-4 என தோல்வியடைந்தது.

More in விளையாட்டு

To Top