Connect with us

Raj News Tamil

1.15 கோடி ரூபாய்க்கு கரண்ட் பில்….ஷாக்கான நகைக்கடை உரிமையாளர்..!!

இந்தியா

1.15 கோடி ரூபாய்க்கு கரண்ட் பில்….ஷாக்கான நகைக்கடை உரிமையாளர்..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் கோட்டூர் நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அங்குள்ள நகரப் பகுதியில் சிறிய கடையில் நகைக்கடை வைத்துள்ளார். இவருடைய கடைக்கு மாதந்தோறும் ரூ.7000 முதல் 8000 வரை மின் கட்டணம் வரும்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை மின் கட்டணம் ரூ. ஒரு கோடியே 15 லட்சத்து 56,116 என மின் ஊழியர்கள் கணக்கிட்டு அட்டையில் எழுதிக் கொடுத்தனர். இதனை பார்த்ததும் நகைக்கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்த போது அவர்கள் கடையில் இருந்த மின் மீட்டரை சோதனை செய்தனர். அது பழுதாகி அளவுக்கு அதிகமாக மின்சாரம் செலவழிக்கப்பட்டதாக பதிவு செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து புதிய தொகை கணக்கிடப்பட்டு வழங்குவதாக உறுதியளித்தனர். இதனால் நகைக்கடை உரிமையாளர் நிம்மதி அடைந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

More in இந்தியா

To Top