Connect with us

Raj News Tamil

56.4 சதவீத நோய்கள்.. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமே காரணம்.. ICMR கூறிய அதிர்ச்சி தகவல்..

இந்தியா

56.4 சதவீத நோய்கள்.. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமே காரணம்.. ICMR கூறிய அதிர்ச்சி தகவல்..

உடற்பருமன், இதயம் தொடர்பான நோய்களால் தான் தற்போதுள்ள பல்வேறு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில், இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும், தேசிய ஊட்டசத்து அமைப்பு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 56.4 சதவீதம் அளவிலான நோய்கள் ஏற்படுவதற்கு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாம் ரக நீரழிவு நோய் ஏற்படுவதை, 80 சதவீதம் தடுக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், முன்கூட்டிய இறப்பவர்களின் எண்ணிக்கையை, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை மற்றும் கொழுப்பு உள்ள, அதிக அளவிலான துரித உணவுகளை பயன்படுத்துவது, சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாமல், உடற்பயிற்சிகளையும் குறைத்துக் கொள்ளுதல், உடற்பருமன் பிரச்சனையை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை மிதான அளவில் உண்ண வேண்டும், சரியான அளவில் உடற்பயிற்சி செய்ய வேண்டும், சர்க்கரை மற்றும் துரி உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை NIN பரிந்துரைத்துள்ளது.

இதற்கிடையே, NIN-ன் இயக்குநர் டாக்டர் ஆர்.ஹேமலதா தலைமையில், புதிய கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு, இந்தியர்களின் உணவுப் பழக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில், நமது உடலுக்கு தேவையான கலோரிகளில், 45 சதவீதம் தானியங்கள் மற்றும் தினை வகைகளில் இருந்து பெறப்பட வேண்டும். 15 சதவீதம், பயிர் வகைகள், பீன்ஸ் மற்றும் இறைச்சிகளில் இருந்து பெறப்பட வேண்டும். மீதமுள்ள கலோரிகள், நட்ஸ், காய்கறிகள், பழங்கம் மற்றும் பாலில் இருந்து பெறப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பருப்பு வகைகள் மற்றும் இறைச்சி பொருட்கள், குறைவான அளவில் கிடைத்தல் மற்றும் அதிக விலையில் விற்பனை செய்வதன் காரணமாக, குறிப்பிடத்தக்க அளவிலான இந்தியர்கள், தானியங்களை மட்டுமே நம்பி இருக்கின்றனர். இதன் விளைவாக, மைக்ரோ மற்றும் மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைய ஏற்பட்டுள்ளது என்று, NIN தெரிவித்துள்ளது.

More in இந்தியா

To Top