Connect with us

Raj News Tamil

ஜெயிலரின்  ஆட்டம் ஆரம்பம் ! ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் !

சினிமா

ஜெயிலரின்  ஆட்டம் ஆரம்பம் ! ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் !

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது இயக்குநர்  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் முன்னணி  பிரபலங்கள் பலர்  நடித்து  வருகின்றனர். 

இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து, பல அப்டேட்டுகளை கொடுத்து வரும் ஜெயிலர் படக்குழு.தற்போது படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது,அதில்,முத்துவேல் பாண்டியன் ஆட்டம் ஆரம்பம்  என்று குறிப்பிட்டுள்ளனர் .ஜெயிலர்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவந்ததையடுத்து. இந்த போஸ்டரை ரஜினி ரசிகர்கள் ஷேர் செய்து  சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top