Connect with us

Raj News Tamil

கவினை ரிஜெக்ட் செய்த விஜயின் மகன்?

சினிமா

கவினை ரிஜெக்ட் செய்த விஜயின் மகன்?

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருப்பவர் நடிகர் கவின். இவர் நடிப்பில் வெளியான லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு திரைப்படங்கள், சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

அடுத்து வர இருக்கும் ஸ்டார் படத்தின் மீதும் , நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், நடிகர் கவினை, விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தன்னுடைய படத்தில் இருந்து ரிஜெக்ட் செய்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகர் கவின் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஜேசன் சஞ்சய் ஒரு கதையுடன் தன்னை சந்தித்தது உண்மைதான்.

கதையில் சில மாற்றங்கள் செய்து விட்டு மீண்டும் சந்திக்கலாம் என்று பேச்சு எழுந்தது. ஆனால் அதன் பிறகு அவர் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று கவின் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top