Connect with us

Raj News Tamil

சட்டப்பேரவைத் தேர்தல்; மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது: சுப்ரியா சுலே!

இந்தியா

சட்டப்பேரவைத் தேர்தல்; மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது: சுப்ரியா சுலே!

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே கூறியதாவது, “மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தல்களும் வேறுபட்டவை. இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்தது. ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்தது. அதனால் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருத இயலாது.” என்று கூறினார்.

More in இந்தியா

To Top