Connect with us

RajNewsTamil

விஜயின் லியோ படத்துடன் மோதும் சிவகார்த்திகேயன்!

சினிமா

விஜயின் லியோ படத்துடன் மோதும் சிவகார்த்திகேயன்!

விஜயின் லியோ திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளையொட்டி, வரும் ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்று, லியோவின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாக உள்ளதாம். இந்த தகவல், லியோ படத்தின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.

இதே வேளையில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே 21 படத்தின் டைட்டில் போஸ்டரும், அன்று தான் வெளியாக உள்ளதாம்.

இரண்டு பெரிய நடிகர்களின் பட அப்டேட்டும் ஒரே நாளில் வெளியாவதால், யாருடைய படத்தை பற்றிய பேச்சு, இணையத்தில் வைரலாகும் என்று ஆர்வம் எழுந்துள்ளது. இதனால், அன்றைய தினம், இருதரப்பு ரசிகர்களும் கொண்டாட்டமாக இருப்பார்கள் என்பது உறுதி..

More in சினிமா

To Top