Connect with us

Raj News Tamil

மதுரை ரயிலில் தீ விபத்து நடந்தது எப்படி? வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழகம்

மதுரை ரயிலில் தீ விபத்து நடந்தது எப்படி? வெளியான அதிர்ச்சி தகவல்!

கொல்லம் – புனலூர் விரைவு ரயிலில் வந்த சுற்றுலாப் பயணிகள், ரயில் பெட்டியை, உள்ளுக்குள் பூட்டிவிட்டு, பெட்டிக்குள்ளேயே மண்ணெண்ணெய் அடுப்பு வைத்து சமையல் செய்தபோது, தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இந்தக் கோர விபத்து மதுரை ரயில் நிலையம் அருகே, கொல்லம் – புனலூர் விரைவு ரயிலில் இருந்து கழட்டி டிராக்கில் விடப்பட்டிருந்த IRCTC சுற்றுலா ரயிலின் 3 பெட்டிகளில் ஒரு பெட்டியில் ஏற்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 17 ந் தேதி லக்னோவில் இருந்து IRCTC ஆன்மீக சுற்றுலா ரயிலில் புறப்பட்ட, 180 பயணிகள் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு சென்று விட்டு, கடைசியாக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரைக்கு அதிகாலை 5.15 மணி அளவில் வந்தடைந்தனர்.

பெட்டியில் இருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே நடைபாதையில் இறங்கி அமர்ந்து இருந்தனர்.

பயணி ஒருவர், பம்ப் ஸ்டவ்வை பற்ற வைத்து டீ தயாரிக்க, தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீயைக் கண்ட வெளியில் இருந்த பயணிகள் சத்தமிட, அவசர கதியில் தீயை அணைக்க முயற்சிக்காமல் கீழே இறங்க, அந்தப் பெட்டி முழுவதும் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதில் கோச்சில் தூங்கிக் கொண்டு இருந்த வயதானவர்கள் கீழே இறங்க இயலாமல் பலியாகி உள்ளனர்.

இதுவரை 9 சடலங்கள், விரைந்து வந்த மதுரை டவுண் தீயணைப்புத் துறையினரும், அக்கம்பக்கத்து பொது மக்களும் தீயை அணைத்து, எரிந்த நிலையில் 9 சடலங்களை மீட்டு உள்ளனர்.

அதில் 5 ஆண்கள், 3 பெண்கள், அடையாளம் தெரியாத சடலம் 1 மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீஸ் மற்றும் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறையினர், போலீஸ் கமிஷனர், போலீஸ் துறையினர் வந்து காயமடைந்தவர்களை மீட்டு மதுரை ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அமைச்சர் பி. மூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து விபரங்களைக் கேட்டு அறிந்தார்.

More in தமிழகம்

To Top