Connect with us

Raj News Tamil

பித்தப்பையில் கொழுப்பு கட்டிகள் – செந்தில் பாலாஜி உடல் நலம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகம்

பித்தப்பையில் கொழுப்பு கட்டிகள் – செந்தில் பாலாஜி உடல் நலம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதயம் சார்ந்த பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “செந்தில் பாலாஜி நலமாக இருக்கிறார். அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக முதலில் கூறினார்கள். அதற்கான சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்ததில் கல் இல்லை என்றும் சிறு சிறு கொழுப்பு கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிப்பது என்பது குறித்து மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள்” என்று கூறினார்.

More in தமிழகம்

To Top