Connect with us

Raj News Tamil

சென்னையில் பிரபல திரையரங்கில் படம் பார்த்த எம்.எஸ்.தோனி!

விளையாட்டு

சென்னையில் பிரபல திரையரங்கில் படம் பார்த்த எம்.எஸ்.தோனி!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேற்று இரவு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான மஹேந்திர சிங் தோனி மற்றும் சென்னை அணி வீரர் தீபக் சஹார் ஆகியோர் யோதா திரைப்படத்தை கண்டுகளித்துள்ளனர்.

நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, நடிகைகள் திஷா பட்டாணி, ராசி கண்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள யோதா திரைப்படத்தை நேற்றைய தினம் பார்த்து உள்ளனர்.

இந்நிலையில் தோனி மற்றும் சகவீரர்கள் திரைப்படம் பார்க்க வந்ததை அறிந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர்….

நேற்று முன்தினம் 17வது ஐபிஎல் தொடர் சென்னையில் தொடங்கியது, முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது இப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து தோனியும் தீபக் சஹாரும் நேற்றிய தினம் சத்யம் திரையங்கில் யோதா திரைப்படத்தை கண்டுகளித்துள்ளனர்.

இந்த வீடியோ தான் தற்போது சமூக தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top